தமிழ் சினிமாவில் சமீப காலமாக இளம் இயக்குனர்கள் சாதித்து வருவது நடைமுறையாகிக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் இளம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் லவ் டுடே திரைப்படத்தை தானே இயக்கி தானே நடித்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் இவர் கோமாளி திரைப்படத்திற்கு முன்பு குறும் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். அந்தக் குறும் திரைப்படத்தின் மூலம் தான் கோமாளி திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருப்பார் அந்த திரைப்படத்தில் ஆட்டோ டிரைவராக பிரதீப் ரங்கநாதன் ஒரு சிறிய காட்சியில் தோன்றி இருப்பார். இந்த நிலையில் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அந்த திரைப்படம் கடந்த நான்காம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பான கதைக்களம் சலிக்காத திரைக்கதை தேவைக்கு அதிகமான நகைச்சுவை என பிரதீப் ரங்கநாதன் தேவையானவற்றை படத்திற்கு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார் இவர் இதற்கு முன்பு நாச்சியார் திரைப்படத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லவ் டுடே திரைப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு முதல் நாளே 2.25 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு தமிழ் திரைப்படம் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது தமிழ் சினிமாவில் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் லவ் டுடே திரைப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி 15 மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு அள்ளிக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் மிக விரைவில் உலக அளவில் 100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி 100 கோடி வசூலை கடந்து விட்டால் இளம் நடிகர் 100 கோடி வசூலை கடந்த முதல் நடிகராக பிரதீப் ரங்கநாதனை பார்ப்பார்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.