Love today total collection report : இயக்குனர்கள் ஹீரோ அவதாரம் எடுக்கின்றனர் அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் முதலில் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் முழுக்க முழுக்க காதல், ஆக்சன், காமெடி என அனைத்தும் இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
முதல் படத்திலேயே இவரும் கடைசி சீனில் நடித்திருப்பார் படம் பெரிய வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்னும் படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார் அவருடன் இணைந்து இவானா யோகி பாபு ரவீனா ரவி சத்யராஜ் ராதிகா சரத்குமார் என பல முன்னணி நடிகர் நடிகைகள்..
படத்தில் நடித்தனர் படம் முழுக்க முழுக்க காதல் பற்றிய படமாக இருந்ததால் இளசுகள் மத்தியில் படம் நின்னு பேசியது அதனாலயே இந்த படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் சக்க போடு போட்டது. 60 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் எல்லாம் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லவ் டுடே படத்தை தயாரித்த கல்பாத்தி அர்ச்சனா அவர்கள் படத்தின் மொத்த வசூலை பற்றி கூறி உள்ளார் அவர் சொந்த உள்ளது என்னவென்றால் லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறி இருக்கிறார் இதனை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.