திரை உலகில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது அந்த வகையில் அஜீத், விஜய், கமல் போன்றவர்களை தொடர்ந்து இந்த ஆண்டை சரியாக பயன்படுத்தியவர் என்றால் அது கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தான்.. இவர் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இவர் எடுத்த திரைப்படம் தான் லவ் டுடே..
இந்த படமும் கடந்த நான்காம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இந்த படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காதல் செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த படமாக இருந்தது படம் இந்த கால கட்டத்திற்கு தேவையான படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .
முதல் நாளில் மட்டுமே லவ் டுடே திரைப்படம் 4 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் தற்போது நான்கு நாட்கள் முடிவில் லவ் டுடே திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் வந்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் மட்டுமே 17 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியிருக்கிறதாம்..
வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டாப் ஹீரோவின் படங்கள் எப்படி வசூல் செய்யுமோ அதுபோல ஒரு அறிமுக ஹீரோவின் படம் வசூல் அள்ளுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது.