OTT யிலும் ரெக்கார்ட் பதிக்கும் லவ் டுடே.! கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் பட குழு.

love today
love today

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது அது மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் படத்தை இயக்கி வெற்றிகண்டு வருகிறார்கள் அந்த வகையில் பல இயக்குனர்களை நாம் கூறிக் கொண்டே போகலாம் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் கவர்ந்த திரைப்படமாக பார்க்கப்பட்டது சமீபத்தில் வெளியாக்கிய லவ் டுடே திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் அவர்கள் இயக்கியிருந்தார் இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். லவ் டுடே திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது  இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு டீன் ஏஜ் ரசிகர்களிடைய அதிகரித்தது.

அதாவது இரு நபர்கள் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் இருவரும் செல்போனை மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. நவம்பர் 4 ம் தேதி வெளியாகிய இந்த திரைப்படம் முதல் நாளில் பெரிதாக கலெக்ஷன் எதுவும் இல்லை ஆனால் அடுத்த அடுத்த நாளில் நல்ல விமர்சனத்தை பெற்று அதிகமான திரையரங்கு திரையிடப்பட்டன அது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில்  மாஸ் காட்டி வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதுமட்டுமில்லாமல் சில நாட்களிலேயே எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூல் செய்தது.

மேலும் இந்த திரைப்படம் தமிழை தாண்டி தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்த படக்குழு அங்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து நல்ல  வசூலையும் செய்தது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பிரபல OTT இணையதளமான நெட்பிலிக்ஸ் இணையதளம் வெளியீட்டு உரிமையை வாங்கி இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியிலிருந்து நெட் பிலிக்ஸ் தலத்தில் படத்தை கண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் யாருமே எதிர்பார்க்காத வகையில் லவ் டுடே திரைப்படம் OTT இணையதளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.