சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் லவ் டுடே. இந்தத் திரைப்படம் வெளியாகி 12வது நாள் வசூல் சாதனையை பற்றி தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த படம் பட்ஜெட்டை விட பத்து மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. விஜயின் பிகில் திரைப்படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான சிறு பட்ஜெட் திரைப்படம் தான் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு ஜெயம் ரவியை வைத்து கோமாளி திரைப்படத்தினை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் இவ்வானா யோகி பாபு, சத்யராஜ் ராதிகா போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தது இவர்களை தொடர்ந்து இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தினை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது.
தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றதால் ஒரு வாரம் கழித்து உலகெங்கும் ரிலீசானது அதேபோல் தற்பொழுது பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட அதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரிலீசான முதல் நாளிலிருந்து நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் தற்போது வரையிலும் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஒளிபரப்பாகப்பட்டு வருகிறது லவ் டுடே திரைப்படம். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்பொழுது அதைவிட பத்து மடங்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இதுவரையிலும் லவ் டுடே திரைப்படம் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. புதுமுக நடிகர், நடிகைகள் நடித்து இவ்வளவு வசூல் செய்திருப்பது இதுவே முதல் திரைப்படமாகும். அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மட்டும் 42 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடியை எட்டு விடவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.