2022-ல் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற திரைப்படங்களில் முதன்மையானதாக இருப்பது லவ் டுடே. கோமாளி படத்தை இயக்கி வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
அவருக்கு ஜோடியாக இவானா நடித்தார் மற்றும் யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை முழுக்க முழுக்க காதலர்களை சம்பந்தமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நல்ல கருத்துக்கள் இருந்ததால்..
மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார் அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் பட்டையை கிளப்பியது. லவ் டுடே திரைப்படம் ஒட்டு மொத்தமாக 60 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது பல கோடி லாபம் பார்த்து உள்ளதாம்.
லவ் டுடே திரைப்படம் மிகப் பிரம்மாண்ட வெற்றியை ருசிக்க நடிகர் – நடிகைகள், கதைக்களம் என அனைத்தையும் தாண்டி இந்த படத்தின் மியூசிக் செம்ம சூப்பராக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் அதற்கு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு செம்ம சூப்பராக இசையமைத்திருந்தார்
இதில் வந்த பாடல்களும் சூப்பராக இருந்தது இப்படி இருக்கின்ற நிலையில் லவ் டுடே படத்திற்காக யுவன் சங்கர் ராஜா வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் ஒட்டுமொத்தமாக அவர் சுமார் 1.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.