2022 – ல் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று இருக்கின்றன ஆனால் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை அள்ளிய படம் என்றால் அது லவ் டுடே திரைப்படம் தான்.. கோமாளி படத்தை இயக்கிய வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் தான்.
லவ் டுடே திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவினா ரவி, இவானா போன்ற பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக இந்த படத்தின் வசூல் முதல் நாளே நான்கு கோடிக்கு மேல் அள்ளியது அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. நினைத்ததை விட அதிகமாகவே வசூல் அள்ளி அசத்தியது.
தமிழைத் தாண்டி பிற மொழிகளிலும் இந்த படத்தின் வரவேற்பு நன்றாக இருந்தது அதனால் லவ் டுடே திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. இப்படி இருக்கின்ற நிலையில் லவ் டுடே திரைப்படம் எங்கெங்கே எவ்வளவு வசூல் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
லவ் டுடே படத்தின் பட்ஜெட் 7 கோடி. தமிழ்நாட்டு வசூல் 55 கோடி தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு கிடைத்த ஷேர் 25 கோடி, 2. கேரளா உரிமை 15 லட்சம், கர்நாடக ஷேர் 1 கோடி, ஆந்திரா – தெலுங்கானா ஷேர் 6 கோடி, வெளிநாட்டு ஷேர் 9 கோடி, சாட்டிலைட் உரிமை 2.25 கோடி, டிஜிட்டல் உரிமை 5.25 கோடி, ஆடியோ உரிமை 25 லட்சம், மொத்தமாக 48.90 கோடி லாபம் இதில் வினியோகஸ்தர்களுக்கு 10% கமிஷன் போக 44.8 கோடி தயாரிப்பாளருக்கு லாபமாக கிடைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.