கடந்த சில வருடங்களாக இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் காமெடியன்கள் போன்றவர்கள் ஹீரோ அவதாரம் எடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர் அந்த வகையில் இந்த ஆண்டு கோமாளி படத்தை இயக்கி வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே..
இந்த படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமென்ட் காதல் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக உருவாகியது. படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தில் பிளஸ் எண்ணவென்றால் இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு சிறப்பான படத்தைக் கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
மேலும் அவருடைய நடிப்பு இந்த படத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.. லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் கைகோர்த்து இவானா, ரவீனா ரவி, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்த படம் தமிழை தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று ஓடுவதால் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. முதல் நாளில் நாலு கோடிக்கு மேல் வசூல் அள்ளும்பொழுது பலரும் கணித்து விட்டனர் இந்த படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என..
அது நடந்து வருகிறது தற்போது வரையிலும் தமிழகத்தில் மட்டுமே லவ் டுடே திரைப்படம் 30 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிய வருகிறது. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இதனால் தற்போது பிரதீப் ரங்கநாதனும் சரி தயாரிப்பு நிறுவனமும் சரி சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.