தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு வருடத்திற்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் பெரும்பாலும் டாப் ஹீரோக்கள் படங்கள் ஒன்னு ரெண்டு தான் மீதி எல்லாமே இளம் நடிகர்களின் படங்கள் தான் வெளிவந்து அசத்துகின்றன அந்த வகையில் இந்த வருடத்திலும் இளம் நடிகர்களின் படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.
இதில் ஒன்றாக தற்பொழுது இடம் பிடித்துள்ளது லவ் டுடே படம்.. லவ் டுடே படத்தை இயக்கி நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன் இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார் முதன்முறையாக லவ் டுடே திரைப்படத்தை இயக்கியும் நடித்தார்.
இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், ரவீனா ரவி, இவனா, ஃபைனலி பாரத், ஆதித்யா, கதிர், சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படம் கடந்த நான்காம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர் அதற்கு ஏற்றார் போல இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது முதல் நாளில் மட்டுமே நான்கு கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
அதனைத் தொடர்ந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது மூன்று நாள் முடிவில் மட்டுமே 15 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை எதிர்த்து வெளியான காபி வித் காதல் திரைப்படம் சுமாரான வசூலையே பெற்று கூடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.