தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது அந்த வகையில் இளம் இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்று வருகிறது அந்த வகையில் பல இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார்கள்.
கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இவர் இயக்கிய திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியுடன் இணைந்து சம்யுக்தா ஹெக்டே , காஜல் அகர்வால், யோகி பாபு, பிரதீப் ரங்கநாதன், கவிதா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது மேலும் இந்த திரைப்படத்தில் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காதலிக்கும் நபர்கள் தங்களுடைய மொபைல் போனை மாற்றிக் கொண்டால் என்ன விபரீதம் நடக்கும் என்பதே இந்த திரைப்படத்தின் கதை.
மேலும் படத்தில் இவானா உடன் இணைந்து ராதிகா சரத்குமார் சத்யராஜ் யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் கொஞ்சம் கூட எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகிய இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை நிலை நாட்டியது இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு மாபெரும் வசூலை குவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஹிந்திலும் ரீமிக்ஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது லவ் டுடே திரைப்படம் அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது வரை 90 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது முன்னணி நடிகர்களின் திரைப்படம் 90 கோடி வசூல் செய்தால் மிகவும் பிரபலமாக கொண்டாடுவார்கள் ஆனால் வெறும் ஐந்து கோடியில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 90 கோடி வசூல் செய்துள்ளது சினிமா உலகிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது