சமீபத்தில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சாதனையை இந்த திரைப்படம் பெற்று வருகிறது. தானே இயக்கி தானே ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த காலத்தில் எப்படி சோசியல் மீடியாவின் மூலம் காதலிக்கிறார்கள் அதில் என்னென்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இளைஞர்கள் மட்டும் நன்றி குடும்பத்தினர்களும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு இந்த திரைப்படம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பினை நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தினை வசூல் தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில் இதனை பார்த்த பலரும் வருகிறார்கள். ஏனென்றால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் அளவிற்கு லவ் டுடே திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோவான பிரதீப் ரங்கநாதனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்கள் எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என கூறி வருகிறார்கள். அந்த வகையில் தளபதி விஜய்யிடம் பிரதீப் கதையை கூறியுள்ளதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் சமீப பேட்டி ஒன்றில் பிரதீப் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பிரேம்ஜி சார் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க என சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் 10 நாள் முடிவில் 50 கோடி வசூல் செய்த நிலையில் தற்பொழுது உலக அளவில் ரூபாய் 52 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் 44 கோடியும் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.