முன்னணி நடிகர்களின் படங்களை ஓரம் கட்டிய லவ் டுடே திரைப்படம்.! 100 கோடி வசூல் சாதனையை முறியடிக்குமா.?

love today 1
love today 1

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் லவ் டுடே வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்பொழுது பல கோடி வசூல் செய்து வருகிறது  மேலும் விரைவில் 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் கோமாளிப் பட இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருந்தது.

மேலும் இயக்குனர் பிரதீப் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார் இந்த படம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது தற்பொழுது வரையிலும் லவ் டுடே படத்தின் வெற்றியைப் பற்றி பேசப்பட்டு தான் வருகிறது. மேலும் திரையரங்குகளிலும் தொடர்ந்து இந்த திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த படத்தில் நிறைய புதுமுக பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

அப்படி இருந்தும் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் நிலையில் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது இன்றைய காலகட்டத்தில் ஒரு காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை மிகவும் எதார்த்தமாக காமெடி கலந்து உருவாக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த படத்தினை பார்க்கும் பொழுது நிஜமாகவே பலருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தியதாக கூறியிருந்தார்கள்.

இந்த படத்தின் கதை மட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த பாடலும் மிகப்பெரிய வெற்றினை பெற்றது அதிலும் முக்கியமாக என்னை விட்டு நீ போனாலும் என்ற பாடல் யூடிபில் செம ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இவ்வாறு வெறும் 5 கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான லவ் டுடே திரைப்படம் தற்பொழுது வரையிலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 55 கோடி வசூல் செய்து உள்ளது.

அதேபோல் உலக அளவில் மொத்தம் ரூபாய் 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.vஇவ்வாறு இந்த திரைப்படம் சிம்பு சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நிகராக வசூல் சாதனையை பெற்றுள்ளது விரைவில் 100 கோடி வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.