இந்த வருடத்தில் பல படங்கள் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கின அந்த வகையில் பொன்னியின் செல்வன் விக்ரம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன அதனைத் தொடர்ந்து சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
தற்போது அந்த லிஸ்டில் பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது லவ் டுடே திரைப்படம் தான்.. இந்த படத்தை இயக்கி நடித்தவர் பிரதீப் ரங்கநாதன் இவர் இந்த படத்திற்கு முன்பாக ஜெயம் ரவி காஜல் அகர்வாலை வைத்து கோமாளி என்னும் படத்தை இயக்கி வெற்றிகண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்தை..
இந்த காலத்திற்கு ஏற்றவாறு மிக சூப்பராக எடுத்தார் படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் கைகோர்த்து சத்யராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், இவானா, ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.
படம் தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு ஓடுகின்றன. அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது முதல் நாளில் நான்கு கோடி அள்ளியது. அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவந்து ஐந்து நாள் முடிவில் தமிழகத்தில் 20 கோடி வசூலித்துள்ள நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஐந்து நாள் முடிவில் சுமார் 40 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.