love romantic between shivani, balagi video viral: விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் எதுவாக இருந்தாலும் மிகவும் முகத்துக்கு முன் பேசி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு பிரச்சனயாக இருந்தாலும் உடனே பேசி தீர்வு எடுத்துக் கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் குரூப்பிசம், ஃபேவரிசம் போன்றவை இருந்தால் முகத்துக்கு நேராக கூறிவிடுகின்றனர் கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசனில் ஆட்டம் மிகவும் நேர்மையாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறலாம்.
இந்த சீசனில் பாலாஜி மற்றும் சிவானி இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளது போன்று தெரியவருகிறது கடந்த 2 தினங்களாக இருவரும் இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டிலுள்ள ஹவுஸ் மெட்டுகள் மன்மதராசா, லூசு பெண்ணே போன்ற பாடலை பாடி கலாய்கின்றனர் அதை கண்டுகொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.
அதை பார்த்த ரசிகர்கள் இது கடந்த சீஸனில் இருந்தது போல நடிப்பு காதலா இல்லை உண்மையான காதலா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
#Day32 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/WxVc2uI7az
— Vijay Television (@vijaytelevision) November 5, 2020