நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஒரு வயதை எட்டிய பிறகு ஹீரோவாக நடித்து டாப் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளவர். இவரது படங்கள் பல வெற்றி தோல்வியை சந்தித்து இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் சிம்பு கேரியரில் ஒரு முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது. இந்த படம் அவருக்கு நல்ல ரீச் கைகொடுத்தது மேலும் படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தை தொடர்ந்து பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் எடுக்க போட்டி போட்டு வந்தனர்.
அப்படி தற்போது சிம்பு பத்துல தல, வெந்து தனிந்தது காடு, கொரோனா குமாரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க சினிமாவில் அதிகம் கிசுகிசுப்புக்கு உள்ளான நடிகர்களில் ஒருவர் சிம்பு.
ஹன்சிகா, நயன்தாரா போன்ற சினிமா நடிகைகளுடன் சிம்பு காதல் வயப்பட்டார் ஆனால் அதையெல்லாம் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆனது பின்பு ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலுடன் காதல் இருப்பதாக பல செய்திகள் உலா இந்த நிலையில் ஒரு பேட்டியில் வலைப்பேச்சு அந்தனன் சிம்புவிடம் தான் காதலிச்ச ஒருத்தி இன்னொருவருடன் நெருங்கி பழகும் போது அந்தப் பெண்ணுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் என்ன எப்படி உணர்வீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த சிம்பு தான் காதலிச்ச பெண் நம்முடன் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை அவர் எங்கு யாருடன் இருந்தாலும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பதே காதல். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இதையும் மீறி என்னுடன் தான் இருக்க வேண்டும் என்னுடன் தான் பேச வேண்டும்.
என கட்டளை இடுவது பிச்சை எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் காதல் என்னைக்கும் அழிவதில்லை காதலர்கள் தான் அழிக்கிறார்கள் எனக் கூறினார். நான்கு பேர் என்னை தாண்டி போயிருக்கின்றனர் அதற்கு காரணம் அவர்கள் இல்லை நான்தான் என கூறியுள்ளார்.