உருகி உருகி காதலித்துவிட்டு பின்பு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நடிகர்கள்.! அடியாத்தி இத்தனை நடிகர்கள் லிஸ்டில் இருக்கார்களா.?

love-cheating
love-cheating

பல நடிகை, நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து  கொண்டு அதன் பிறகு அவர்களை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார்கள். இந்த நிலையில் எந்த நடிகர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்பதை தற்பொழுது பார்ப்போம்.

கமலஹாசன் – 90களில் இருந்து இன்றளவும் திரையுலகில் அட்டகாசமாக நடித்துவரும் நடிகர் கமலஹாசன். இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். நடிகர் உலகநாயகன் கமலஹாசன் 1978இல் மாணிக்க நம்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகண்டார். அதன் பிறகு 1988இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் இவர்கள் 2014 ஆம் ஆண்டில் பிரிந்துவிட்டனர்.

ரகுவரன் – வில்லன் ரோலில் செம்மையாக நடித்து திரையுலகில் வில்லன் என்றாலே ரகுவரன் தான் என்று சொல்லும் அளவிற்கு  முன்னணி நடிகராக வலம்வந்தார். இவர் நடிகை ரோகிணி 1986இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2004ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

முகேஷ் – இவர் நடிகை சரிதாவை 1988ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

சுரேஷ் சந்திர மேனன் – இவர் 1986இல் நடிகை ரேவதி காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு 2002ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் 2013ஆம் ஆண்டில் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

பிரதாப் பைத்தர் – நடிகர் பிரதாப் பைத்தர் 1985இல் நடிகை ராதிகா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி ஒரு வருடங்கள் மட்டும்தான் இருவரும் ஒன்றாக இருந்த வந்தனர். திருமணமாகி ஒரு வருடத்திலேயே அதிகப்படியான பிரச்சனைகள் வந்ததால் 1986இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

மனோ விஜேன் – நடிகர் மனோ விஜேன் 1988இல் நடிகை ஊர்வசியை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.அதன் பிறகு 2008ஆம் ஆண்டில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டார்கள்.

ராமராஜன் – நடிகர் ராமராஜன் நடிகை நலினியை 1987இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு 2000ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

பார்த்திபன் – டைரக்டர் பார்த்திபன் நடிகை சீதாவை 1990-தில் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.அதன் பிறகு 2001ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

பிரகாஷ்ராஜ் – நடிகர் பிரகாஷ்ராஜ் லலிதா என்பவரை 1994இல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2009ல் கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் 2010ஆம் ஆண்டில் போனி வர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

சரத்குமார் – நடிகர் சரத்குமார் முதலில் சாயா என்பவரை 1984இல் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 2000ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். பின்பு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.

அரவிந்த்சாமி – நடிகர் அரவிந்த்சாமி 1994இல் காயத்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2010ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன் பிறகு நடிகர் அரவிந்த்சாமி 2012ஆம் ஆண்டில் அபர்ணா முகர்ஜி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ராஜ்கிரண் – நடிகர் ராஜ்கிரன் செல்லம்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் பத்மஜோதி என்பவரை தனது ஐம்பதாவது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் – நடிகர் விஷ்ணு விஷால் இவர் ரஜினி நடராஜன் என்ற இவருடைய காலேஜ் மெட்டை காதலித்து 2011இல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.