தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய மகனையும் சினிமாவில் நடிக்க வைத்து பிரபலமாகியுள்ளார் அந்த வகையில் பிரபுவும் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்துள்ளார்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரபு குஷ்பூ உடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது கூட திரைப்படங்களில் நடிகர் பிரபு பிஸியாக நடித்து வருகிறார்.
நடிப்புக்கு பெயர் போனவர் என்றால் அது சிவாஜி கணேசன்தான் அந்த வகையில் அவருடைய அந்த வித்தையை சரியாகக் கற்றுக் கொண்ட பிரபு இன்னும் சினிமாவில் பிரபலமாக நடித்து வருவது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் அப்பா அண்ணன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் பிரபு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு நடித்து வருகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அதேபோல நயன்தாராவின் ஆசைக் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்திலும் பிரபு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை பிரபலமான நமது நடிகரின் குடும்பத்தில் தற்போது ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது பல்வேறு ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரபுவின் துணைவியார் புனிதா அவருடைய அம்மா சில நாட்களாக உடல்நிலை குறைவின் காரணமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது புனிதாவின் தாயார் அவர்கள் திருமதி கோபாலகிருஷ்ணன் மறைந்து உள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு தெரிந்த உடன் தங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை பலரும் தெரிவித்து வருகிறார்கள்.