விஜய் டிவியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமாகி மிகவும் வெற்றிகரமாக ஒலிபரப்பாகி வந்தது. தற்போது ரசிகர்களின் வேண்டுகோள்படி பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை அப்படியே காட்டும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகிறது.
இவ்வாறு கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட வாரத்திற்குப் பிறகு தொடர்ந்து தொகுத்து வழங்க முடியாத காரணத்தினால் தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார். கமலஹாசன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் மிகவும் பிரபலமடைந்தார்கள் அதோடு இவர்களுக்கென்று தனி ஒரு ஆர்மியும் உருவானது. இவ்வாறு இவர்களின் காதல் இளசுகளின் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் பலர் எதிர்த்து வந்தனர் எனவே விருந்தினராக வந்த லாஸ்லியாவின் அப்பா லாஸ்லியாவை கண்டித்ததால் சரியாக இருக்க ஆரம்பித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை இவர்களைப் பற்றிய தகவல் ஒரு மறைமுகமாகவே புரியாத புதிராக இருந்து வந்தது. ஆனால் கவினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வந்தார்.
லாஸ்லியாவின் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து கவினும் லிப்ட் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஊர்க் குருவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அடிபட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம் கவினைப் பற்றி கேட்கும்பொழுது நாங்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் பிறகு எங்களுக்கு செட்டாகாது என்று தெரிந்ததும் பிரிந்து விட்டோம் என்று கூறிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#Losliya Opens About Break Up With #Kavin pic.twitter.com/PXytUmn02O
— chettyrajubhai (@chettyrajubhai) April 2, 2022