கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரல் ஆனது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியாவும் ஒருவர், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பிரபலம் அடைந்ததற்கு காரணம் கவின், லாஸ்லியா காதல்தான்.
பிக்பாஸ் முடிந்தாலும் இன்னும் இவர்கள் காதல் பற்றி பல பேர்ரால் பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் லாஸ்லியா தற்போது ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துவருகிறார். மேலும் தமிழ் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் லாஸ்லியா ஆல்பர்ட் ராஜா இயக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார் இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார் மேலும் சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார்.
இந்த இரு திரைப்படத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்தநிலையில் உலகையே அச்சுறுத்தி அவரது கொரோனோ வைரஸ், இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் ஆரம்பித்தது இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது உலகில் பல நாடுகளில் கொரோனோ தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் பல பிரபலங்கள் தோரண வைரஸ் பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் லாஸ்லியா ‘ப்ளீஸ் ஸ்டே செப்’ கருத்துடன் ஒரு மாஸ்க் அணிதுள்ள ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது.