நடிகை லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர் இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார், அதன் பின்பு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இவர் செய்யும் ஒவ்வொரு கியூட் ரியாக்ஷனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதனால் ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஆர்மியை தொடங்கினார்கள், அதன்பிறகு லாஸ்லியா எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் அன்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் கொண்டுவந்தார்கள் ரசிகர்கள்,.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், இவர்கள் காதலித்தார்களா இல்லையா என்பது இன்னும் ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது, இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக தனி திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.
லாஸ்லியா இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இவர் முதன் முதலில் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார், இந்த நிலையில் லாஸ்லியா அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் சிவப்பு நிற ஆடையில் மிகவும் அழகாகத் தோற்றம் அளிக்கிறார் இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தியுள்ளார் என்று கமென்ட் செய்துள்ளார்கள்.
இதோ வைரலாகும் புகைப்படங்கள்.