பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை லாஸ்லியா.
இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா இவர்களுக்கு இடையே ஏற்பட்ட காதலின் மூலம் இளசுகளின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அந்த வகையில் மூன்றாவது போட்டியாளராக வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் காதலித்து வந்தாலும் தற்போது சினிமாவில் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியா பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பச்சை நிற மாடர்ன் உடையில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.