விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீசனை கமல்தான் தொகுத்து வழங்கினார் முதல் சீசனில் ஓவியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது, ஆர்மியும் தொடங்கினார்கள், அதேபோல் மூன்றாவது சீஸனில் லாஸ்லியாவுக்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்தார்கள் ஆர்மியின் தொடங்கினார்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியா அமைதியாக இருந்தார் அதாவது மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவது இல்லை, தானும் எந்த ஒரு பிரச்சனையும் செய்வதில்லை, தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தார், அதுமட்டுமில்லாமல் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் பாடல் பாடுவது நடனம் ஆடுவது என தனது பொழுதுபோக்கை கழித்தார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில்#kollywoodwaitsforlosliya என்ற டேக்கை லாஸ்லியா ஆர்மி ட்ரென்ட் செய்து மாஸ் காட்டினார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றரை லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது, இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்தது படத்தில் நடிப்பதற்காக தான் இதுபோல் புகைப் படத்தை வெளியிடுகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.