Losliya Mariyanesan : கடந்த சில வருடங்களாக நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் லாஸ்லியா பேச்சு. செய்தி வாசிப்பாளராக வலம் வந்த லாஸ்லியா விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் உள்ளே வந்த இவர் கவினுடன் காதல் வயப்பட்டார் இது ரசிகர்களுக்கு பிடித்துப் போகவே கொண்டாடினர்.
அந்த சீசன் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் வெளியே வந்த லாஸ்ட்லியாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது முதலில் ஹர்பஜன்சிங் உடன் கைகோர்த்து பிரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். வெளிவந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவான கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் தர்ஷன் உடன் இணைந்து நடித்தார்.
என்னமா லாஸ்லியா வரவர டிரஸ் குறைஞ்சுகிட்டே போகுது.! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள்
படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை அதன்பின் பட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் லாஸ்லியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் லாஸ்லியா பேட்டி ஒன்றில் தான் மனக்கஷ்டத்தில் இருப்பதை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்..
அவர் சொன்னது கவினுக்கு திருமணமான விஷயம் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது கேரியரிலும் அவரின் வளர்ச்சி பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பொழுது எந்த விஷயத்தில் நீங்கள் உடைந்து போனீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர் அதற்கு பதில் அளித்த லாஸ்லியா என் அப்பா விஷயம் தான். மூன்று வருடங்கள் கடந்தாலும் ஒருவரின் இடத்தை இன்னொரு நபரால் மாற்ற முடியவில்லை..
தினமும் ஒரு விஷயம் மிஸ் செய்கிறேன் என்றால் அது அப்பா தான் என் அப்பாவிடம் நான் பிக் பாஸ் போகிறேன் என சொன்ன பொழுது தொகுப்பாளினியாக போகிறாயா என கேட்டாரு வெளியே வந்த பார்த்தபோது அவருக்கு கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் பின்னர் டீசர், ட்ரெய்லர் வரும்பொழுது ரொம்ப சந்தோஷப்பட்டார் அது எல்லாமே நான் மிஸ் பண்றேன்.