குட்டி குழந்தையாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறும் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்.

losliya
losliya

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிய பிரபலங்கள் பலரும் சின்னத்திரையில் அடியெடுத்து வைப்பது வழக்கமாக இருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் சீரியல், ரியாலிட்டி ஷோ என பங்குபற்று தனது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமா உலகில் வாய்ப்புகள் இல்லை என்பதால் சின்னத்திரை பக்கம் காலடி எடுத்து வைக்கின்றனர்.

ஆனால் சினிமா உலகில் நடிப்பிற்கு பெயர்போன சிவாஜிக்கு பிறகு நடிப்பில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வந்த கமலஹாசன் திடீரென சின்னத்திரை பக்கம் திரும்பியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. கமலஹசன் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன்களை  வழங்குகிறார் இவர் கடந்த 3 சீசன் களை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார்.

இதில் பங்கு பெற்ற பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து சிறப்பாக வலம் வருகின்றனர் அப்படி கடைசியாக நடந்து முடிந்த சீசனில் சிறப்பாக பயணித்த லாஸ்லியா அவர்கள் தற்போது வெள்ளித்திரயில் காலூன்றி பயணித்து வருகிறார் இவர் தற்போது ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக போட்டோ ஷூட் நடத்திய க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனது பக்கம் தக்க வைத்துக் கொண்டு வருகிறார் லாஸ்லியா அந்த வகையில் தற்போது அவர் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்பட செய்துள்ள அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.