ஹர்பஜன் சிங் லாஸ்லியா நடித்துள்ள பிரெண்ட்ஷிப் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.! என்னம்மா பட்டையை கிளப்புகிறார் பார்த்தீர்களா

friendship
friendship

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பல நட்சத்திரங்கள் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள்.

அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்றவர் தான் லாஸ்லியா இவர் பிக்பாஸில் தனது திறமையை நிரூபித்து அனைவராலும் ஈர்க்கப்பட்டார் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெகு ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் லாஸ்லியாவின் லெவல் வேற லெவல் என்றுதான் கூறவேண்டும் அந்த அளவு மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு  பிறகு பல விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் புதிதாக தற்போது பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைந்து லாஸ்லியா நடித்துள்ளார் இவருடன் இணைந்து சதீஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

ஹர்பஜன் சிங் முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது இந்த நிலையில் தற்போது டிரைலர் வெளியாகி மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.