சற்றுமுன் லாஸ்லியாவின் அப்பா காலமானார்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

losliya-father
losliya-father

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா, அதன்பறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இவர் பேசும் தமிழுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, பிக்பஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டார். பிக்பாஸ்க்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஹர்பஜன்சிங் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார், இந்த நிலையில் லாஸ்லியாவின் அப்பா மரியநசன் மரணமடைந்த செய்தி சற்று முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் லஸ்லியாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். இவரின் இழபபை லாஸ்லியா எப்படித் தாங்க போகிறார் என்பதுதான் அனைவரின் கேள்விக்குறியாக இருக்கிறது ஏன் என்றால் அப்பா மீது அதிக பாசம் உள்ளவர் லாஸ்லியா.

இவரின் குடும்பம் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தது மிகவும் கடினப்பட்டு தான் இந்த இடத்தை அடைந்துள்ளார் அப்படியிருக்கும் நிலையில் அப்பாவின் இறப்பு பெரும் இழப்பாக இருக்குமென ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.