நடனமாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் கட்டி இழுத்த லாஸ்லியா.! சும்மா ஜிவ்வுன்னு இருக்கே

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலம் அடையாத பலருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 3மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் லாஸ்லியா.  இவர் இலங்கையை சேர்ந்தவர் ஆவார். அந்தவகையில் இவர் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே ஏதாவது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடும். அந்த வகையில் லாஸ்லியாவும் தொடர்ந்து 4 திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் முதலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் சிவா ஆகியவர்களுடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா உடன் போட்டியாளராக பங்கு பெற்ற தர்ஷன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் தற்போது உள்ள இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இவர் திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் இவர் எந்த வீடியோ புகைப்படங்கள் போட்டாலும் அதற்கு ரசிகர்கள் லைக்குகளை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது லாஸ்லியா மாடர்ன் உடையில் காதல் பாட்டு ஒன்றுக்கு அழகாக நடனமாடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்களையும் லைக்குகளையும் அள்ளி குவித்து  வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.