விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான நடிகர், நடிகைகள் அறிமுகமாகி தொடர்ந்து தற்பொழுது ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்து அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை லாஸ்லியா .
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்த இவருக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து வரும் இவர் தற்பொழுது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார்.
சமீபத்தில் தான் இத்திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு லாஸ்லியா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதோடு சமீப காலங்களாக இவர் புகைப்படங்கள் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரோஜா பூக்களை கையில் வைத்துக் கொண்டு அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.