இளம் தலை முறை கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஐபிஎல் – லில் தனது திறமையை நிரூபித்து உடனடியாக இந்திய அணியில் இடம் பிடிக்கின்றனர். அப்படி போனவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் 13 வது சீஸனில் தனது அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்தார்.
இதை சரியாக கண்டுபிடித்து பிசிசிஐ உடனடியாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தது. சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 20 போட்டியில் வரும் சக்கரவர்த்திக்கு விளையாடும் வாய்ப்பை கொடுத்தது.
ஒரு சிலரால் சிறந்த பின்னர் என அழைக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி இலங்கையுடனான 20 ஓவர் போட்டியில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மொத்தமாகவே அவர் விளையாடிய போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் மேலும் எதிர் அணிக்கு மிகப்பெரிய அளவில் எந்த ஒரு தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை.
மேலும் அவர் பந்தை ஒரே சீராக வீசுகிறார் அவரது பந்தை ஈசியாக கணிக்கிறார்கள் என்று பலரும் கூறுகின்றனர். வருண் சக்கரவர்த்தி வருகின்ற காலங்களில் பலவிதமான ஸ்டைலில் வீசினால் மட்டுமே அவர் நிலைத்து நிற்பதோடு ஜொலிக்க முடியும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஹீம் ராசா தெரிவித்தார்.
மேலும் அவர் பந்தை சீராக விசாமல் பிட்சுக்கு ஏத்த மாதிரி வேகமாகவும், மெதுவாகவும் வீச வேண்டும் என தெரிவித்தார்.