தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தல அஜித். இவரது நடிப்பு திறமை மற்றும் சமூக அக்கறையை பார்த்து பல மக்கள் மற்றும் ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர் இதன் மூலம் அவர் கோடிக்கணக்கான மக்கள் ரசிகர்களை தனது பாச பிணைப்பின் மூலம் கட்டி போட்டு உள்ளார்.
தற்பொழுது அஜித் அவர்கள் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் மீதி படபிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தொடங்கப்படும் என தெரியவருகிறது இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அஜித் பற்றிய லேட்டஸ்ட் மற்றும் சிறப்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாட வைக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது ஒரு செய்தி ஒன்று அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அட்வைஸ் கொடுத்துள்ளது அது என்னவென்று தற்போது பார்ப்போம்.அஜித்தை மிகவும் பிடித்தவர்கள் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் பெயரை நெஞ்சில் பச்சை குத்துவது மற்றும் கைகளில் பச்சை குத்தி தனது அன்பை வெளிப்படுத்துவது வழக்கம் அப்படி இவரது ரசிகர்கள் பலகோடி பேர் இதனை செய்து வருகின்றனர் இவர்களை போன்று சினிமா ,சீரியல் என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ஜெமினி.
இவர் அஜித்தின் தீவிர ரசிகர் தான் என்பதால் அதனை வெளிப்படுத்தும் வகையில் டாட்டூ குத்தியுள்ளார்.இவர் ஆரம்பத்தில் அஜித்துடன் இணைந்து கிரிடம் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் பேசி உள்ளது.கிரீடம் படத்தில் விழியில் உன் விழியில் பாடலின் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்று இருந்தோம் அப்பொழுது என்னுடைய கையில் தீனா மணி என்ற டாட்டூ இருப்பதை கண்டு அஜித் இது என்ன என்று கேட்டார்.
அப்பொழுது அவருக்கு தமிழ் சரியாக தெரியாது அதனால் ஆங்கிலத்தில் இது குறித்து சொன்னேன் அதற்கு இந்த டேட்டுவை அழித்துவிடுங்கள் ஒரே வார்த்தையாக கூறினார் நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு என்னிடம் அவர் உன்னைப் போன்று பலரும் இதனை எல்லாம் செய்கிறார்கள் ஆனால் எனக்கு சுத்தமாக பிடிக்காது நானும் ஒரு சாதாரண மனிதர் தான் திரையில் பார்த்து மகிழ்வது உடவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார். இதிலிருந்து அவர் மீது இருந்த பற்றும் பாசமும் குறையவில்லை அதற்கு மாறாக அதிகரித்தது என தெரிவித்தார் ஜெமினி.