தளபதி விஜய் தனது அம்மா, அப்பா, மனைவி ஆகியோருடம் நின்று என்ன வேலை செய்கிறார் பாருங்கள்.? வைரலாகும் புகைப்படம்.

vijay family

தமிழ் சினிமாவில் தற்போது அசைக்கமுடியாத சக்தியாக உருமாறி உள்ளவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுப்பது வெகு சிலரே அந்த லிஸ்டில் இணைந்து சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருபவர் தான் விஜய். மாஸ்டர் திரைப்படத்தின் கடைசி வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக முதல்முறையாக இளம் இயக்குனர் திலீப்குமார் உடன் இணைந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தது அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் எடுக்கப்பட்ட இருந்தது ஆனால் இதற்காக மிகப்பெரிய ஒரு பிரம்மாண்ட மால் போன்ற ஒரு செட்டை உருவாக்க படக்குழு திட்டம் போட்டது.

ஆனால் அந்த கனவை தவிடு பொடியாக்கியது கொரோனா இரண்டாம் அலை காரணம் தொற்று வேகமெடுத்து உள்ளதால் விஜய் தற்போது படப்பிடிப்பை நிறுத்த படக்குழுவிடம் கேட்டார் அதற்கு படக்குழுவும் ஓகே சொன்னதால்  தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது சரியான முடிவுதான் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறினர் ஏனென்றால் இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், மற்றவர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இச்செயல் எடுக்கப்பட்டது சரிதான் என பலரும் கூறினர்.

இந்த நிலையில் விஜய்யின் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை  சமூகவலைதளத்தில் அவ்வபோது ரசிகர்கள் வெளியிட்டு கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் விஜய், அம்மா, அப்பா மற்றும் மனைவி, மகன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டுவது போல் எடிட் செய்து புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டிங் ஆகி உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

vijay family
vijay family