தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி பல வருடங்கள் கழித்து கிராமத்து கதையில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று வெளிவர இருக்கிறது.
அதற்கு முன்பாக சில பேட்டிகளை வெளியிட்டு பிரபலங்களையும், ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது மேலும் சமீபத்தில் இந்த படத்தை ரஜினியின் குடும்பங்கள் பார்த்து மிரண்டு போயுள்ளனர். மேலும் சிறுத்தை சிவாவுடன் ரஜினி அவர்கள் மீண்டும் ஒரு தடவை இணைய வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் படம் வெளிவந்து 4 வாரங்கள் முடிந்த பிறகு ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி அவரது ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.தற்போது ஒரு வழியாக சிகிச்சை பெற்ற பின் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மாறி தற்போது வெளியே வரத் தொடங்கியுள்ளார்.
அதற்கு முன்பாக மருத்துவமனையில் டாக்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டபின் தனது போயஸ் கார்டனில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையதள பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
