சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க நடிகர் நடிகைகள் தான் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அவர்களுக்கு பின்னால் பல நட்சத்திர பட்டாளங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் அதை நாம் சமீபகாலமாகத்தான் பார்த்து வருகிறோம்.
அப்படி சினிமா உலகில் நடிகர் நடிகைகளுக்கு பின்புறமிருந்து வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் தற்போது பிரபலமடைந்து வருகின்றன அப்படி தமிழ் சினிமா உலகில் சினிமாவிற்கு பின்புலமாக இருந்து ஒருவர் களில் ஒருவராக கருதப்படுபவர்கள் பாடகர்கள் அதிலும் குறிப்பாக பின்னணி பாடகர்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
அந்த வகையில் பின்னணி பாடகியாக தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்வேதா மோகன்.இவர் சிறுவயதில் முதலில் இருந்து தற்போது வரையிலம் பாடலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.
இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் எம்மா எம்மா என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் இவர் அச்சம் அச்சம் இல்லை, குச்சி குச்சி இரக்கமா பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டும் தனது திறமையை வெளிக்காட்டாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன பல மொழிகளிலும் பாடலை பாடி அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்பொழுது பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடுவராக பணியாற்றி வருகிறார்.
இப்படி வளம் வந்த இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அஸ்வின் சாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது ஷ்ரேஷ்டா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் ஸ்வேதா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் தனது அம்மா மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மூன்று பேரும் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள் என்று கூறி புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.