தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த பல நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று விட்டு பின்பு ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனவர்கள் பலர் உண்டு. அதன்பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி படங்களை கொடுத்தவர்களும் உண்டு.
அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்து பின்பு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர்களின் லிஸ்ட்டை இங்கே காணலாம்.
அரவிந்த்சாமி : ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அரவிந்த்சாமி போல் இருக்க வேண்டும் என ஏங்கிய காலமும் உண்டு. அதுமட்டுமில்லாமல் பல பெண்கள் அரவிந்த்சாமி போல் மாப்பிள்ளை வேண்டும் என ஏங்கிய காலம் உண்டு அந்த அளவு கொடி கட்டி பறந்தவர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் வெளியாகிய ரோஜா பாம்பே திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன்பிறகு நடித்த ஒரு சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு மோகன் ராஜ் இயக்கத்தில் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார் அரவிந்த்சாமி. அதன்பிறகு நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் : சினிமா பின் புலம் இருந்தாலும் சினிமாவில் சாதிக்க முடியாமல் தவித்து வந்தவர் அருண்விஜய். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியாகிய மாஞ்சாவேலு தடையர தாக்க ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகி எண்ணை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார்.
என்ன இருந்தாலும் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது அதனைத் தொடர்ந்து அருண் விஜய் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது சில திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளது.
மாதவன் : மேடி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் மாதவன் இவர் அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதன்பிறகு வெளியாகிய பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் யாவரும் நலம் மற்றும் மன்மதன் அன்பு ஆகிய திரைப்படங்கள் இந்த பார்த்த வெற்றியைக் கொடுத்த கொடுக்காததால் சிறிது காலம் எங்கே போனார் என்று தெரியவில்லை அதன் பிறகு ஒரு சில வருடங்களுக்கு பிறகு இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில்தான் விட்ட இடத்தை மீண்டும் பெற்றார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய விக்ரம் வேதா திரைப்படத்திலும் மகத்தானது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ராஜ்கிரண் : தொடைக்கு மேல் வேட்டியை கட்டிக்கொண்டு பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டவர் ராஜ்கரன் அதன்பிறகு சண்டைக்கோழி, காவலன் ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
மேலும் தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய பவர்பாண்டி திரைப்படத்தின் கதையை ராஜ்கிரன் அவர்களிடம் கூறி பாராட்டையும் பெற்றார் இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து ராஜ்கிரன் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
சத்யராஜ்: ஒரு காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்குப் போட்டியாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் நடிகர் சத்யராஜ் அதன்பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு மீண்டும் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்திய அளவில் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் சத்யராஜ் அவர்களுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமைந்து வருகிறது.