Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் ராஜாவின் பார்வையிலே படத்தில் சேர்ந்து நடித்தனர் அதன் பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்க ஒன்று கூடினர் அந்த சமயத்தில் தயாரிப்பாளருக்கும் அஜித்துக்கும் இடையே சில பிரச்சனைகள் வர..
அந்த படத்தில் இருந்து விலகினார் அதன் பிறகு அஜித் விஜய் ஒன்றாக சேர்ந்து படம் பண்ணவே இல்லை.. அஜித், விஜய்க்கு நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லை என்றாலும் படங்களின் மூலம் மோதிக் கொள்கின்றனர் இதனை ரசிகர்கள் ஒரு போட்டியாக பார்க்கின்றனர்.
மேலும் எங்க ஸ்டார் படத்தின் வசூல் இவ்வளவு , அடுத்த படம் எப்படி இருக்கும் அப்படி இருக்கும் என சொல்லி இரண்டு ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் மோதிக் கொள்கின்றனர் இந்த நிலையில் அஜித் திரைக்கு வந்து 31 வருடங்கள் ஆனதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் விஜய்க்கு எதிராக பதிவையும் போட ஆரம்பித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ரஜினி, விஜய் மோதி கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான் இதில் அஜித்துக்கு இடமே இல்லை என கூறுகின்றனர். இந்த நிலையில் தான் அஜித் ரசிகர்கள் twitter பக்கத்தில் ஒரு பதிவை போட்டு விஜய் ரசிகர்களை வம்பு இழுத்து உள்ளனர் அதாவது.. அஜித் தான் உண்டு..
தான் வேலை உண்டு என இருக்கும் பொழுதே விஜயால சமாளிக்க முடியல.. ஒருவேளை விஜய் மாதிரி ஆடியோ லான்ச், பேன்ஸ் மீட் எல்லாத்துலயும் இறங்க ஆரம்பிச்சா விஜயெல்லாம் அஜித்தோட செல்வாக்கு பாதி கூட ஈடு கொடுக்க முடியாது. அஜித் இப்படி இருக்கிற வரையும் தான் விஜய்க்கு நல்லது என பதிவில் போடப்பட்டுள்ளது வைரலாக்கி வருகிறனர்.