தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடுபவர் லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் “மாநகரம்” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் இவர் எடுத்த கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி கண்டது.
இப்பொழுது கூட தளபதி விஜயை வைத்து லியோ என்னும் படத்தை எடுத்து வருகிறார். படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டு ஷூட்டிங் ஆரம்பித்தது முதல் கட்ட சூட்டிங் சென்னையில் சைலண்டாக முடிந்ததை எடுத்து இரண்டாவது கட்டம் ஷூட்டிங் 180 பேர் கொண்ட குழு தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் பறந்தது அங்கு இரண்டு மாதங்கள் கடும் குளிரென்று பார்க்காமல் படக்குழு..
விறுவிறுப்பாக எடுத்து முடித்தது. அதனைத் தொடர்ந்து சென்னையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. லியோ திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது காரணம் அந்த அளவிற்கு இந்த படத்தில் பல டாப் நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது தான்..
விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகின்றனர் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் நாகராஜ் யாருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது லோகேஷன் அடுத்த படத்தில் சிம்பு தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் ஹாலிவுட் வெளியான kill bill என்ற படத்தின் ரீமைக்காக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான தகவல் வெகு விரைவிலேயே வரும் எனவும் சொல்லப்படுகிறது.