விக்ரம் படத்தை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் – தளபதி 67 படத்திற்காக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

lokesh
lokesh

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே ப்ளாக்பஸ்டர் மூவியாக அமைந்துள்ளது. இதனால் லோகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற மூன்று படங்களும் சூப்பர் ஹிட் அடிக்க தற்போது தனது ஆசை நாயகன் கமலஹாசனுக்கு ஒரு ரசிகனாய் விக்ரம் இன்னும் ஆக்சன் படத்தின் கதையை கூற அந்த கதை கமலுக்கு பிடித்துப்போக இந்த கூட்டணி அமைந்து விக்ரம் என்ற படம் உருவாக்கியது.

படமும் எதிர்பாராத அளவு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் வசூலையும் வாரிக் குவித்து வருகின்றனர். பான் இந்திய அளவில் வெளியான இந்த விக்ரம் படம் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் உலக அளவில் இதுவரை விக்ரம் திரைப்படம் 320 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யுடன் கைகோர்த்து விஜய்யின் 67 வது படத்தை இயக்க உள்ளார். விஜய் தற்போது அவரது 66ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் லோகேஷ் உடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் இயக்க உள்ள விஜயின் 67வது படத்திற்கு சம்பளமாக 10 கோடி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த செய்தியை மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.