தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகன் லிஸ்டில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் தற்பொழுது கூட லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படி சினிமா உலகில் நடித்தாலும் மறுபக்கம் அரசியல் வியாபாரம், சின்னத்திரை என எல்லாவற்றிலும் கால்தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வயதிலும் வெற்றியை நோக்கி ஓடும் ஆர்வம் இவருக்கு இருப்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் திரை படத்தில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசிஸ் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படம் போல இந்த படக்குழுவும் glimpse வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறது.
அந்த வகையில் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகன் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தில் இருந்து glimpse தியாகம் என தகவல்கள் கூறப்படுகிறது இந்த நிலையில் விக்ரம் படத்தில் இருந்து மற்றொரு சூப்பரான செய்தி ஒன்று கசிந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் இணைந்து உள்ளாராம் செம்பன் வினோத் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பகத் பாசிஸ் இணைந்த நிலையில் தற்போது இவரும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.