மீடியோ உலகம் தற்போது ஹிட் படங்களைக் கொடுக்கும் நடிகர், நடிகைகளையும் தாண்டி இயக்குனர்களையும் வெகுவிரைவிலேயே சரியாக கண்டுபிடித்து அவர்களையும் மிகப்பெரிய ஒரு உச்ச நட்சத்திரமாக மாற்றுகிறது அந்த வகையில் குறைந்த திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் நல்லதொரு வரவேற்பை பெற்றதால் தற்போது லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய ஒரு அந்தஸ்தை எட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் டாப் இயக்குனர்கள் லிஸ்டிலும் இணைந்தார் கடைசியாக விஜயுடன் கைகோர்த்து “மாஸ்டர்” திரைப்படத்தை வேற லெவல் எடுத்தார் அதன் பிறகு உலக நாயகன் கமலஹாசனுடன் கை கொடுத்து விக்ரம் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய ஒரு பொருட் செலவில் எடுத்து வருகிறது.
இந்த படத்தில் கமலுக்கு பிறகு நடிகைகளை இயக்குனர் லோகேஷ் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிரட்டும் வில்லன்களை தேர்வு செய்தார் அந்த வகையில் இந்த படத்திற்கு விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர்களை தட்டி துவக்கினார். தற்போது தான் நாயகிகளை ஒவ்வொருவராக தூக்கி வருகிறார் அந்த வகையில் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, vj மகேஸ்வரி ஆகிய மூவரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் மேலும் சில பிரபலங்கள் இணைந்துள்ளனர் ஆனால் அவர்களைப் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் மிக விரைவிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுக்கு ஜோடியையும் இப்போதுவரையிலும் அறிமுகப்படுத்தவில்லை இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலை மிகவும் இளமையாக காட்ட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.
அதாவது 80 காலகட்டங்களில் அழகாக இருந்த கமலை இந்த படத்தில் காட்ட அவர் அதிக முயற்சிகள் எடுத்து வருகிறார் இதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அவர் ரெடியாக இருக்கிறாராம். எவ்வளவு செலவானாலும் செய்ய படக்குழு ரெடியாக இருப்பதாக தகவல்கள் கசிகின்றன ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.