காப்பி அடிப்பதில் அட்லீக்கு அண்ணனாக இருப்பாரோ.? லோகேஷ் கனகராஜின் வண்டவாளத்தை புட்டு புட்டு வைக்கும் நெட்டிசன்கள்

lokesh
lokesh

lokesh kanagaraj : லோகேஷ் கனகராஜ்  தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வளர்ந்திருக்கிறார் இவர் முதலில் பேங்கில் வேலை பார்த்து வந்தார் ஆனால் இவருக்கு படம் இயக்குவதில் அதிகம் ஆர்வம் இருந்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு மனைவியை வேலைக்கு போக சொல்லி இவர் திரைப்படங்களை இயக்கினார்.

முதலில் “மாநகரம்” என்னும் சிறிய படத்தை எடுத்தார். ஆனால் முதல் படத்திலேயே தனது திறமையை நிறுவித்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பிறகு தனது ஆசை நடிகர் கமலிடம் ஒரு கதையை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே நடிப்பதையும் தாண்டி படத்தையும் தயாரிக்க அவரே முடிவு செய்தார் ஒரு வழியாக விக்ரம் என்ற பெயரில்  படம் வெளிவந்து சக்கபோடு போட்டது உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பற்றிய ஒரு தகவல் பலரையும் அதிர வைத்துள்ளது.. லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை ஒரு வெப் தொடரில் இருந்து காப்பி அடித்து தான் எடுத்துள்ளார் என ஆதாரத்துடன் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ளார். விக்ரம் படத்தின் கதை என்னவென்றால்.. தனது மகன் நேர்மையாக இருந்த காரணத்தினால் வில்லன்களால் கொள்ளப்படுகிறான்.

இதற்கு கமல்  மொத்த வில்லன்களையும் கொன்று பழித்திருக்கிறார் கடைசியாக தனது பேரனை காப்பாற்றுகிறார் அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு better call saul என்ற ஆங்கில வெப் சீரிஸ் தொடரிலும் கதைகளும் அமைந்திருக்கும். இதை பார்த்த பலரும் லோகேஷ் காப்பி அடிக்கலாம் அதுக்குன்னு இப்படியா காப்பி அடிக்கிறது எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.