லோகேஷ் – விஜய் இணையும் தளபதி 67 படத்தின் வில்லன் இந்த முன்னணி ஹீரோவா.? வெளியே கசிந்த தகவல்.

thalapthy 67
thalapthy 67

லோகேஷ் கனகராஜ்  உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் ஒரு மிகப் பெரிய ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார் இந்த படத்தின் கதையை சற்று வித்தியாசமாக இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து உள்ளதால் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. இதுவரை விக்ரம் திரைப்படம் 200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.  வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் சாதனையை ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தளபதி 67 வது திரைப்படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளாராம். லோகேஷ் கனகராஜ் படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக தான் இதுவரை உருவாகி வந்துள்ளன அந்த வகையில் தளபதி 67 ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய டாப் ஹீரோ தான் நடித்துள்ளார்கள் அந்த வகையில் பார்த்தால் தளபதி 67 திரைப்படத்திலும் ஒரு டாப் ஹீரோ வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தில் யார் வில்லனாக நடிப்பார் என்பதே..

ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது தளபதி படத்தில் விஜய்க்கு வில்லனாக தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இச்செய்தி தீயாய் பரவி வருகிறது.