லியோ படத்தில் லோகேஷ் என்னை பழி வாங்கி விட்டார்.? சீக்ரெட் உடைத்த மிஷ்கின்.!

leo
leo

நடிகர் விஜய் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரிஷாவுடன் மீண்டும் இணைந்து “லியோ” படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் படத்தை எடுத்து வருகிறார். லியோ படத்தின் ஷூட்டிங் சென்னை, காஷ்மீர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அனைத்தும் முடிந்து தற்போது டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளது.

லியோ படத்தில் விஜய், திரிஷாவுடன் இணைந்து  அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின்  மற்றும் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். அண்மையில் கூட  இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

அந்த எதிர்பார்ப்பையை இன்னும் எகுற வைக்க..  இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தனக்கு தெரிந்த சில அப்டேட்டுகளை கொடுத்து வருகின்றனர் குறிப்பாக இயக்குனர் மிஸ்கின் தனது ஷூட்டிங் எப்பொழுது எல்லாம் முடிகிறதோ உடனே அதைப்பற்றி உளறி விடுவார் அப்படி அண்மையில் லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயும் நானும் சண்டை போட்டுக் கொள்ளுவது படமாக்கப்பட்டது என கூறினார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒரு அப்டேட்டை அவர் கொடுத்துள்ளார். லியோ படத்தில் தான் ஒரு சின்ன வில்லன் என்றும் விஜய் உடன் நடித்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்ததாக அவர் கூறினார் தொடர்ந்து பேசிய மிஸ்கின் விஜய் ஸ்வீட்டான பாய் என்றும்..

அவரைப் போல அவரது ரசிகர்களும் டீசன்டாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் ரசிகர்களுக்கு அதிகமான பொறுப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.  இதை கேள்விப்பட்ட பலரும் உங்களுடையே திறமைக்கு பெரிய வில்லன் ரோலே கொடுத்து இருக்கலாம் லோகேஷ் ஏமாத்தி விட்டார் என கூறிவருகின்றனர்.  இந்த படத்திற்கு முன்பாகவே மாவீரன் படம் வருகின்ற 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தில் மிஸ்கின் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.