விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து கைதி 2-வில் களமிறங்கும் லோகேஷ்..! எதிர்பார்ப்பை எகிறவிட்ட தயாரிப்பாளர்..!

kaithi-2
kaithi-2

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படமானது ராஜ்கமல் என்ற தயாரிப்பு நிறுவனம் மற்றும் உதயநிதி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில், மைனா நந்தினி, மகேஸ்வரி ஷிவானி நாராயணன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அதுமட்டுமில்லாமல் தற்போது வசூல் வேட்டையில் வெளுத்து வாங்கி வருகிறது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பல கைதி திரைப்படத்திற்கு தொடர்பு உள்ளது போல் காட்டப்பட்டது இதனை பார்த்த ரசிகர்கள் மிக சரியாக கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் கைதட்டலையும் கூச்சலையும் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படம் புரியவில்லை என்றால் கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு விக்ரம் திரைப்படத்தைப் பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் கைதி திரைப்படத்தின் 2வது பாகத்தை ஆரம்பிக்கலாமா என பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து கைதி திரைப்படம் மிக விரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்த கைதி திரைப்படம் ஆனது 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக படம் மெகா ஹிட் அடிக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஏனெனில் முதல் பாகத்தில் சில விஷயங்களை இரண்டாம் பாகத்திற்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு லோகேஷ் கனகராஜ் பல காட்சிகளை அமைத்து உள்ளார்.