சத்தமே இல்லாமல் கைதி 2 வில் மாஸ் நடிகரை களம் இறக்கும் லோகேஷ்.. ரோலக்ஸ் சூர்யா இல்லீங்கோ…

kaithi 2 mass actor
kaithi 2 mass actor

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கைதி இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாக நடிகர் கார்த்தி சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து பேசினார் கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மேலும் ஒரு மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து 2019 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் கைதி ஹீரோயின் இல்லாமலும் பாடல் இல்லாமலும் ரொமான்டிக் சீன் இல்லாமலும் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த திரைப்படம்.

மேலும் லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜயை  வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார் அதன் பின்னர் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வேற லெவலில் வெற்றி கொடுத்தார்.

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது முறையாக லொகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கைதி, விக்ரம் பட வரிசையில் LCU திரைப்படமாக வெளியானது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ், இதுவும் எல் சி யூ திரைப்படமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் அடுத்த வருடம் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து பிரியாணி பக்கெட்டை தூக்குவதற்கு ரெடி என நடிகர் கார்த்தி சமீபத்தில் ரசிகர்களின் சந்திப்பில் கூறினார். லொகேஸின் எல் சி யு களத்தில் விக்ரம் படம் மூலம் சூர்யாவும் இணைந்துள்ளார் இந்த நிலையில் கைதி 2 திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனாலும் அதனை மிஞ்சும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி எல் சி யூ திரைப்படமாக உருவாக இருக்கும் கைதி இரண்டாவது திரைப்படத்தில் தளபதி விஜய்யை  லோகேஷ் கனகராஜ் களம் இறக்க இருக்கிறாராம் இந்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது மேலும் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்பொழுது நடைபெறும் கோர்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 69 ஆவது திரைப்படம் கடைசி திரைப்படம் என அறிவித்திருந்தார் ஆனால் தற்பொழுது மீண்டும் கைதி  இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.