விஜயை தொடர்ந்து நயன்தாராவுடன் கூட்டணி அமைக்கும் லோகேஷ்..! பெத்த லாபம் பார்க்க எடுக்கும் புது அவதாரம்.

vijay-logesh-nayanthara
vijay-logesh-nayanthara

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து  விஜய் உடன் கைகோர்த்து தளபதி 67 படத்தை எடுக்க இருக்கிறார் அண்மையில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது ஆனால் புகைப்படங்கள் கூட வெளியிடவில்லை.  வெகு விரைவிலேயே தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறதாம்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்குமென சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் என்ன பண்ணப் போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் மண்டையை உருட்டிய நிலையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது அதாவது அண்மைக்காலமாக இயக்குனர்கள், நடிகர்கள் தொடங்கி பலரும்  தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கின்றனர்.

அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். அதுவும் முதல் படமாக ஒரு திரில்லர் படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை மான் கராத்தே படத்தை இயக்கிய வெற்றி கண்ட ரத்னகுமார் தான் இந்த திரில்லர் படத்தை எடுக்க உள்ளாராம். இந்த படம் வெற்றி பெற அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது ஏனென்றால்  ராகவா லாரன்ஸ் அண்மைக்காலமாக திரில்லர்  படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இவரை போலவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சமீப காலமாக திரில்லர் படங்களில் தான் நடித்து வருகிறார் ஏன் இன்று கூட அவர் நடிப்பில் உருவான கனெக்ட் திரைப்படம் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது இதனால் இவர்கள் இருவரும் அடுத்ததாக இணையும் படம் மிகப்பெரிய ஒரு  வெற்றி படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.