பிரம்மாண்டத்தில் சங்கரையே மிஞ்சிய லோகேஷ்.! காஷ்மீரில் பட்டறையை போட்ட லியோ டீம்…

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் இயக்குனர் சங்கர் ஆனால் தற்போது இவரையே மிஞ்சும் அளவிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு செயலை செய்து வருகிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

அதாவது மாநகர என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதனை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இதனை அடுத்த தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக லீக் ஆகிக்கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் ஏகப்பட்ட சஸ்பென்சுகளை மறைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைகிறது என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இது ஒரு பக்கம் இருக்க தற்போது ஒரு தகவலால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார்கள் அதாவது இதுவரைக்கும் பிரம்மாண்டம் என்ற பெயரை எடுத்தவர் சங்கர் மற்றும் ராஜமௌலி தான்.

அதாவது தங்களுடைய கதைக்கேற்றவாறு எதார்த்தமான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்று அதிகமாக மெனக்கிடுவதால் செலவு அதிகமாகி கொண்டே போகும் ஆகையால் இயக்குனர் சங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைத்து வந்தார்கள் ஆனால் இதுவரைக்கும் இவர்கள் செய்த விஷயத்தை எந்த ஒரு இயக்குனரும் செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பு நிறுவனம் தான்.

பொதுவாக ஒரு இயக்குனர் படத்தை இயக்கும் போது தயாரிப்பாளர்கள் கொடுத்த செலவை மட்டும் தான் செய்ய முடியும் அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களால் சில குடைச்சல்கள் வருமாம் ஆகையால் அவர்கள் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த செலவில் மட்டும் படத்தை எடுத்து வருகிறார்கள் ஆனால் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சங்கரை போலவே லியோ திரைப்படத்தை பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்.

அந்த வகையில் காஷ்மீரில் நடந்து வரும் லியோ பட படிப்பில் 500க்கும் மேற்பட்ட தமிழர்களை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் இதற்காக செலவும் அதிகமாக இருக்கிறதாம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் லோகேஷ் மீது உள்ள நம்பிக்கையால் எந்த ஒரு குடைச்சலும் கொடுக்காமல் இருக்கிறார்களாம்.

அது மட்டுமல்லாமல் காஷ்மீரில் இருக்கும் நபர்களை வைத்து படம் எடுத்தால் இன்னும் செலவு கம்மியாகிவிடும் ஆனால் தமிழர்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறாராம் எதற்காக என்றால் கதைக்கு ஏற்றவாறு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் மெனக்கெடுக்கிறார் என்று கூறப்படுகிறது.