தமிழ் சினிமாவுலகில் சைலண்டாக இருந்து கொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை லோகேஷ் கனகராஜ் டாப் நடிகர்களான கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர், இப்போ உலக நாயகன் கமல் நடித்த விக்ரம் என தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட் படங்களைகொடுத்து அசத்தியுள்ளார் லோகேஷ்.
குறிப்பாக கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இது வரை மட்டுமே 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது விக்ரம் திரைப்படம் வருகின்ற நாள்களிலும் நல்லதொரு வசூலை அள்ளும் என கணிக்கப்படுகிறது.
விக்ரம் படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்களை இயக்க ரெடியாக இருக்கிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் ஒரு படம் பண்ணுகிறார் மேலும் கைதி 2, விக்ரம் 3 ஆகியபடங்கள் இருக்கின்றன.
இந்த மூன்று படங்களுமே ஆக்ஷனுக்கு திரைப்படங்களாக தான் இருக்கும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கைதி 2 படம் குறித்து கேட்கப்பட்டது.அவர் சொன்னது : கைதி படத்தில் நடிகர் கார்த்தி ஒரு கட்டப்பை வைத்திருப்பார் அதில் இருப்பது எல்லாம் கபடி விளையாண்டு வெற்றிபெற்ற கோப்பைகள்.
அவர் ஒரு கபடி பிளேயர் இதை வைத்து தான் கதை தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் கூறிஉள்ளார் அப்படி என்றால் கைதி 2திரைப்படம் வேற லெவல் ஒரு ஆக்சன் கலந்து திரைப் படமாக இருக்கும் என கூறிய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.