தளபதி 67 படத்திற்காக ஸ்கெட்ச் போடும் லோகேஷ்.! மூன்று இடத்தில் ஷூட்டிங்…

thalapathy
thalapathy

தமிழ் சினிமா முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் வாரிசு திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நடிகர் விஜய்க்காக  இயக்குனர்கள் கதைகளை எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள் அந்த வரிசையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளார்.

வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் கமிட்டாகி உள்ள விஜய் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணையுள்ளார் இவர்கள் இருவரும் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தனர்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இணைய உள்ளனர். லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்திற்காக காத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டதால் விஜய் வாரிசு படம் முடிந்தவுடன் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறபடுகிறது இந்த நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் 3 இடத்தில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மூணாறு, கோவா மற்றும் அரங்கு வேலி ஆகிய இடங்களில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை விட அடுத்ததாக நடிகர் விஜய் அவர்கள் நடிக்க போகும் தளபதி 67 திரைப்படத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.