தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் அண்மை காலமாக வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன கடைசியாக வெளியான பீஸ்ட் படம் கூட கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 67வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படமும் முடித்தவுடன் அடுத்த வருட இறுதியில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யும் இதற்கு முன்பாக மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர் அந்தக் படம் அப்போது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போது ஒரு சிறப்பான சம்பவம் நடந்துள்ளது அதுகுறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.
மாஸ்டர் படத்திற்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஒருசமயம் காற்று அதிகமாக வீசியதால் தூசு காரணமாக படப்பிடிப்பு பாதி நேரம் நடக்க வில்லை அதனால் தினேஷ் லோகேஷிடம் கிரிக்கெட் விளையாட அழைத்து இரு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். இயக்குனர் லொகேஷன் விளையாண்டு வந்து தளபதி விஜய்யை பார்த்தார்.
விஜய் உடனே டேய் ஆயிரம் பேரை அழைத்து வந்து எங்களை உட்காரவைத்து ஜாலியா கிரிக்கெட் விளையாட்டு வரேன்னு சொல்றியே எனக் கேட்டாராம். பின் சரி நானும் வரேன்னு விஜய் அவர்களோடு சேர்ந்து கிட்டத்தட்ட 60 ஓவர் செட் செய்து 5 மணி நேரம் விளையாடினார்கள்.