விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்.. போஸ்டரில் கமலுடன் சேர்ந்து யார் யார் இருகாங்க பாருங்கள்.! வைரல் நியூஸ் இதோ.

lokesh-and-kamal
lokesh-and-kamal

தமிழ் சினிமா உலகில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி பேரும், புகழும் சம்பாதித்த கமலஹாசன் சமீப காலமாக சினிமாவில் நடிக்காமல் அரசியலில் களம் கண்டு தனது பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்.

அந்த வகையில் இவர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து “விக்ரம்” என்ற திரைப்படத்தில் நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் வில்லனாக பல முன்னணி பிரபலங்கள் நடிக்கப் போவதாக தகவல்கள் எழுந்தன இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் உச்சத்தை தொட்டது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் இந்த படத்தை தற்போது ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். அதை ரசிகர்கள் மத்தியில் மேலும் எகிற வைக்க படக்குழு விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக லோகேஷ் கனகராஜ் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதாவது விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற பத்தாம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என கூறியிருந்தார் அந்த நிலவரத்தின் படி இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது வெறித்தனமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் வேற லெவெலில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அதிகபட்சமாக இன்னொரு வில்லன் ஜான் அபிரகாம் நடிக்க இருப்பதாக தெரிய வருகிறது ஆனால் படக்கூடாது எப்போது உறுதிப்படுத்தும் என்பது தெரியவில்லை.